Advertiseme


' />

சிங்கையில் இந்திய பள்ளிவாசல்கள்

சிங்கையில் இந்திய பள்ளிவாசல்கள்

மார்க்கத்தையும்,தமிழ் மொழியையும் இருவிழிகள் என பேணி வந்த இந்திய முஸ்லிம்கள் அங்கே பல பள்ளிவாசல்களை உருவாக்கினர்.மஸ்ஜித் ஜாமியா சூலியா (1826-27) மஸ்ஜித் அல் அப்ரார் (1827) மஸ்ஜித் மலபார் (1848) மஸ்ஜித் அப்துல் கபூர் (1859) பெண்கூலன் பள்ளிவாசல் (1845) மெளலானா முகம்மது அலி மஸ்ஜித் அங்கூலியா ஆகிய பள்ளிவாசல்களை உருவாக்கினார்.இதில் மஸ்ஜித் அங்கூலியாவை குஜராத்திலிருந்து வருகை தந்த அங்கூலியா குடும்பத்தினர் கட்டினார்கள்.இவையாவும் தமிழ் முஸ்லிம்களாலும் நிர்வகிக்கபடுகின்றன.
  மலபார் பள்ளியை திட்டச்சேரியை சேர்ந்தவர்கள் உருவாக்கினார்கள்.இப்போது அதை கேரளா முஸ்லிம்கள் நிர்வகிக்கிரார்கள்.இது தவிர மஸ்ஜித் பாயா கோயாங் (1899),மஸ்ஜித் அல் ஹூதா (1995) மஸ்ஜித் மைதீன் (1935) போன்ற பள்ளிவாசல்களை உருவாக்குவதில் தமிழ் முஸ்லிம் முன்னோடிகள் துணை நின்றிருக்கிறார்கள். சைனா டவுன் பகுதியில் குஜராத்தி போரா முஸ்லிம்கள் ஒரு பள்ளிவாசல்களை கட்டி நிர்வகித்து வருகிறார்கள்.
           இதற்கு காரணம் இந்த முக்கிய வணிகப்பகுதி இந்திய முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்துதான்.இதில் மெளலானா முகம்மது அலி பள்ளிவாசல் பெருநகர சீரமைப்பு என்ற பெயரில் அகற்றப்பட்டு, அங்கே UOB வங்கிக்கான  வானுயர கட்டிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பகரமாக அதன் அடித்தளப்பகுதி பள்ளிவசலாக செயல்படுகிறது. இதே நிலைதான் பென்கூலன் பள்ளிவாசலுக்கும் ஏற்பட்டது.
         
             தெலுக் ஆயர் தெருவில் நாகூர் தர்ஹா என்ற பெயரில் ஒரு புராதன கட்டிடம் உள்ளது. இங்கு சமாதிகளோ, வழிபாடுகளோ இல்லை. இது ஒரு கட்டிடம் மட்டுமே. இப்பகுதி எங்கும் ஒரு காலத்தில் முஸ்லிம்களின் கடைகள் நிரைந்திருந்தன.
           காதர் பிள்ளை என்பவரது முயற்சியால் கி.பி.1830ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 1974ல் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 20.05.2011ல் இதனை சிங்கப்பூரின் மரபுடைமை நிலையமாக முன்னாள் அதிபர் நாதன் திறந்துவைத்தார்.
           அதில் தமிழக முஸ்லிம்களின் வரலாறு, வாழ்க்கை, கலாச்சாரம்.ஆகியன கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது.
  -மக்கள் உரிமை
           

Advertiseme


Close