சீனாவில் தீடீரென ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் 367 மரணம்!!!

சீனாவில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 367 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் யுனான் நகரத்தை ஒட்டி சற்றுமுன் 6.1 ரிக்டர் அளவுகோளில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 367 நபர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், 1300 பேர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் 12,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 4,37,000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் முதல் கட்ட சேத விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 14 ஆண்டுகளில் சீனா சந்தித்த மிக பெரிய நிலநடுக்கம் இதுவாகும். 
சீன அரசாங்கம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2000 கூடாரங்களும், 3000 படுக்கைகளும், உணவுகளும் மருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு: நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close