கொச்சியில் விமானத்தின் டயர் வெடித்தது!

சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஏர்- இந்தியா விமானம், கொச்சியில்  தரையிறங்கும்போது டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் திறமையான  செயல்பாட்டால் 450 பேர் உயிர் தப்பினர். 
சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில்  இருந்து ஊழியர்கள் உட்பட 450 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் -இந்தியா விமானம் நேற்று  காலை 7.40க்கு கொச்சி விமான நிலையம் வந்தது. விமானம் ஓடு பாதையை நோக்கி  இறங்கியபோது, விமானத்தின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தத்தை  கேட்டதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடை ந்தனர். அப்போது,  விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு டயர் வெடித்த  விவரத்தை கூறி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி,  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
அதுவரை, விமானத்தை வானத்திலேயே விமானி வட்டமிட்டு கொண்டிருந்தார். பின்னர்,  விமானி மிகவும் திறமையாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.  இதனால், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் கொச்சி விமான  நிலையத்தில் பல மணிநேரம் பரபரப்பு நிலவியது.
dinakaran

Advertisement

Close