பட்டுக்கோட்டையில் பெற்றோர் ஆசிரியர்கள் மோதல்

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆழகான கையெழுத்து தேர்வு போட்டியினை (பிரைனோ பிரைன் ) தனியார் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.
அதனை முறையாக செய்யாததினால் பெற்றோர்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட எல்.கே.ஜி முதல் அனைத்து பள்ளி மாணவ,  மாணவிகளும் கலந்துகொள்ளும் வகையில் இந்த அழகான எழுத்து போட்டி நடத்தும் நோக்கில்
விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்ப படிவமும் விநியோகிக்கப்பட்டது. 
இதில் வெற்றி பெற்றவர்கள் அதன் பிறகு மாவட்ட அளவிலும், அதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்றும் அந்த மாநில அளவிலான போட்டியினை சுட்டி டிவியில் வெளியிடுவார்கள் என விளம்பரம் செய்துள்ளனர்.
விண்ணப்பத்திற்கு தனியாக பணம் ஏது வசூல் செய்யப்படவில்லை. போட்டி ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பம் விநியோகம் செய்த அளவிற்கு போட்டிக்கான முன்னேற்பாடுகள் ஏதும் செய்யவில்லை என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்த சம்பவம் பற்றி போட்டியில் தனது மகளை கலந்துகொள்ள அழைத்து வந்த முனைவர் நவீன்சேவியர் கூறியதாவது: தனது பள்ளியும் சுட்டிடிவியும் இணைந்து இந்த போட்டியினை நடத்துவதான விளம்பரம்செய்து விண்ணப்பம் விநியோகித்தனர்.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு தரும் நோக்கத்தில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை போட்டியாளர்கள் கலந்துகொள்ளலாம் என கூறியிருந்தனர்.
இன்று விடுமுறை தினமாக இருந்ததினால் கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்களை அழைத்துக்கொண்டு காலையிலேயே பெற்றோர்கள் வந்துவிட்டனர். அந்த பள்ளியின் சார்பில் வெறும் இரண்டு நிர்வாகிகள் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்தனர்.
மாணவர்களை பதிவு செய்வதற்கோ, அவர்களுக்கான தேர்வு அறை மற்றும் தேர்வு நேரத்தை குறித்து கொடுக்க அவர்களால் முடியவில்லை. வெறும் இரண்டு அறைகளை மட்டுமே தேர்வு நடத்த தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கியுள்ளனர்.
11 மணி வரை மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்னும் பட்சத்தில் பெற்றோர்கள் போட்டியாளர்களிடம் தகராறு செய்ய ஆரம்பித்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் போட்டியாளர்களையும் கலவரத்தில் ஈடுபட்ட பெற்றோர் சிலரையும் காவல்நிலையம் அழைத்துசென்றனர். அங்கு நடைபெற்ற விசாரனையில் போட்டியாளர்கள் இத்தனை பேரை எதிர்பார்க்கவில்லை என்றும், கூட்டம் அதிகமானதால் தங்களால் கூட்டத்னை நிர்வகிக்க முடியவில்லை, இனிமேல் இது போல தயார் நிலையில் இல்லாமல் போட்டிகளை நடத்த மாட்டோம் என போலீஸில் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
இன்று விடுமுறை நாளில் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பல மணி நேரம் காத்திருந்த பெற்றோர்களுக்கு அந்த பள்ளியின் செய்பாட்டில் ஆத்திரம் ஏற்பட்டது தவிர்க்க முடியாதது என்றார்.
இந்த சம்பவம் பற்றி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மயில்வாகனன் கூறும் போது: பள்ளி தலைமையாசிரியர் மற்றொரு கும்பகோணம் பள்ளி விபத்தினை போன்று ஒரு சம்பவம் ஏற்படும் சூழ்நிலையினை இன்று செய்துவிட்டார். பெற்றோர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது அனுமதி கொடுத்த
அரசு பள்ளி தலைமையாசிரியர் சம்பவ இடத்தில் இல்லை. 
இந்த அசம்பாவதத்தில் அங்கம் இங்கும் ஓடிய மாணவ மாணவிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் ஒரு போட்டியினை அரசு பள்ளிக்கட்டிடத்தில் நடத்துவதற்கு தனியார் பள்ளிக்கு எந்த வகையில் அனுமதி கொடுத்தார் என தெரியவில்லை. 
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்ற முறையில் நான் கேட்டதற்கு என்னை தரக்குறைவாக பேசி உன்னால் முடிந்ததை செய்துக்கொள் என கூறிவிட்டார், அதனால் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தலைமை ஆசிரியர் மீது போலீஸில் புகார்கொடுத்துள்ளேன். 
மேலும் சில பெற்றோர்களும் புகார் கொடுத்துள்ளனர் என்றார். பள்ளி தலைமையாசிரியர்  கோவிந்தராஜை கேட்டபோது: நான் வெளியில் இருக்கிறேன்.அரசு பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனங்கள் ரத்ததான முகாம், கண்சிகிச்சை முகாம் நடத்துவது போல கட்டணம் வசூல் செய்யாமல் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இந்த போட்டியினை நடத்த இரண்டு அறைகள் மட்டுமே கேட்டனர்.
ஆனால்அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடியதால் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்ததாக கேள்விபட்டேன். மற்றபடி அந்த போட்டியில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றார்.
courtesy: pattukottai newstimes

Advertisement
Close