அதிரை செய்னா குளத்தில் முழுமையாக முடிக்கப்படாமல் நிறுத்தப்பட்ட பணிகள்!!!

நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரிக்கு பின்புரம் அமைந்திருக்கும் கீழத்தெரு செய்னா குளம் கடந்த 50 ஆண்டுகளாக மாசுபட்டு அப்பகுதியில் இருக்கும் வீடுகளின் கழிவு நீர் தேங்கும் இடமாக இருந்து வந்தது. 

அந்த குளத்தை பற்றி யாரிடம் கேட்டாலும் அது சாக்கடை குளமாச்சே! என்று கூறும் அளவுக்கு மிகவும் மாசடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் ஏறக்குறைய 50 வருடங்களுக்கு பிறகு இந்த குளத்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தூர்வாரப்பாட்டு சுற்றியும் வேலிகள் அமைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி குளத்தில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க குளத்தின் அடிப்பகுதியில் சுவர் அமைக்கப்பட்டது.
இந்த வேலைகள் அனைத்தும் முடிவடைந்தது விட்டதாக மக்கள் எண்ணிகொண்டிருக்கின்றனர்.
ஆனால் குளத்துக் கரையில் அமைக்கப்பட்டுள்ள சுவர் முழுமையாக கட்டப்படாமல் கீழத்தெரு சாலைவழியாக மட்டும் கட்டப்பட்டு காதிர் முகைதீன் கல்லூரியை ஒட்டியுள்ள குளத்துக் கரையில் சுவர் கட்டபடவில்லை. அத்துடன் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது.
சம்பந்தப்பட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் தலையிட்டு குளத்துக் கரையில் உள்ள சுவரை கட்டுவதற்க்கு நடவடிக்கை எடுக்குமாறும், இந்த பணியை முழுமையாக நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Advertisement

Close