சிங்கப்பூரில் அரசியலும்,இந்திய முஸ்லிம்களின் வெற்றிடமும்

சிங்கப்பூரில் அரசியலும்,இந்திய முஸ்லிம்களின் வெற்றிடமும்

சிங்கப்பூரில் வாழும் இந்திய முஸ்லிம்கள்,அன்றும் இன்றும்அந்நாட்டு அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்.நாகூரை சேர்ந்த அப்துல் ஜப்பார் மட்டுமே சிங்கபூர் நாடாலமன்றதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் தான் வட்டார உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இந்திய முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதில் பாடுபட்டவர்.அதன் விளைவாக உருவானது தான் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம்.(UIMA)இவருக்கு பின்னால் ஆளும்கட்சியிலும் சரி,எதிர்கட்சியான பாட்டாளி கட்சியிலும் சரி,குறிப்பிட்ட பொறுப்புகளில் இந்திய முஸ்லிம்கள் யாரும் இல்லை.இப்போது இந்திய முஸ்லிம்களுக்கு அதிகாரபூர்வமாக 23 சங்கங்கள் செயல்படுகின்றன.
10 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சீக்கியர்கள் நாடாளமன்ற உறுப்பினர்களாக உள்ளது என குறிப்பிடத்தக்கது.தொழிலிலும்,வேலைவாய்ப்பிலும் அக்கறை காட்டும் இந்திய முஸ்லிம்கள் அரசியலில் ஆர்வம் காட்டாதது ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
சிங்கபூர் மண்ணில் நீண்ட காலத்திற்கு முன்பாகவே,இரண்டற கலந்து விட்ட கடையநல்லூர் மற்றும் தென்காசி சமூகத்திலிருந்து கூட யாரும் அரசியலில் உருவாகாதது ஆச்சரியம் தான்.இது குறித்து கடையநல்லூர் முஸ்லிம் சங்கத்தின் தலைவர் மசூத் அவர்களிடம் கேட்டபோது இது குறித்து தாங்களும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அடுத்து வரும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இந்திய முஸ்லிம்களின் சார்பில் அரசியல் பிரதிநிதியை அடையாளம் காட்டுவோம் என்றும் கூறினார்.இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து அமைச்சர்களிடம் எடுத்து கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம்  இந்திய முஸ்லிம்-மலாய் முஸ்லிம்களிடையே திருமணங்கள் மூலம் உருவான கலப்பின சமூகத்திலிருந்து பலர் சிங்கப்பூர் அரசியலில் முத்திரைப்பதித்து உள்ளனர்.அவர்களில் சிலரை குறிப்பிட முடியும்.ஜைனுல் ஆபிதீன் ரஷீத்,சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை துணை அமைச்சராக (2005-2011) பணியாற்றினார்.தற்போது அமைச்சர்களாக இருக்கும் யாகூப் இப்ராகிம்,ஜுல்பிகலி போன்றோரும் குருப்பிடதக்கவர்கள்.  
சிங்கபூர் நாடாலமன்றதில் தற்போது சபாநாயகராக ஒரு பெண் இருக்கிறார்.அவர்களின் பெயர் ஹலிமா யாகூப்.அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.இவர் ஏற்கனவே சமூக-குடும்பநலத்துறை துணை அமைச்சராக பணியாற்றியவராவார்.இது போல் இந்திய மலாய் கலப்பின பின்னணி கொண்ட பலர் அரசியலில் உள்ளனர்.இனி வரும் காலத்திலாவது இந்திய முஸ்லிம்கள் அந்நாட்டு அரசியலில் பங்கு பெற ஆர்வம் காட்ட வேண்டும்.
-மக்கள் உரிமை 

Advertisement
Close