அனுமதி பெறாத கல்வி நிறுவனங்களுக்கு சீல்! கலெக்டர் எச்சரிக்கை!

தஞ்சாவூர் உள்ளூர் திட்ட பகுதிகளில் திட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
தஞ்சாவூர் உள்ளூர் திட்ட பகுதிகளில் தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள 31 கிராமங்கள் அடங்கியுள்ளது. இப்பகுதிக்குள் கட்டப்படும் எவ்வித கட்டிடங்களுக்கும் மனைப்பிரிவு அபிவிருத்திகளுக்கும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49ன்கீழ் உள்ளூர் திட்ட குழுமத்தின் திட்ட அனுமதி பெற வேண்டும். அவ்வாறு திட்ட அனுமதி பெறாமல் 52 கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, டாக்டர்.நல்லிகுப்புசாமி கலைக்கல்லூரி, பொன்னையா ராமஜெயம் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி, பான்செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி, மருதுபாண்டியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரத் அறிவியல் மற்றும் மேலாண் மை கல்லூரி, டாக்டர் எஸ்.ஆர்.ஜே.கல்வியியல் கல்லூரி, புனித ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரி, தமிழ்வேள் உமாமகேசுவரனார் கல்வியியல் கல்லூரி, டாக்டர்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி. 
மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி, பாரத் கல்வி நிறுவனங்கள், பான்செக்கர்ஸ் கல்வியியல் கல்லூரி, பரிசுத்தம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி, புனித சேவியர் தொழில்பயிற்சி நிறுவனம், ஸ்ரீ ஆதிசங்கரர் தொழில் பயிற்சி நிறுவனம், அவர்லேடி நர்சிங் கல்லூரி, பாரத் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை கல்வி நிறுவனம், தி கிறிஸ்தகிங் மேல்நிலைப்பள்ளி, யாகப் பா மேல்நிலைப்பள்ளி, ஆல்வின்மேல்நிலைப்பள்ளி, புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, திரு மகள் மேல்நிலைப்பள்ளி, ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்பாடிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செவன்த்டே அட்வென் டிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஞானம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கமலாசுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளேக் மேல்நிலைப்பள்ளி, ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னையா ராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, பி.வி.செல்வராஜ் மேல்நிலைப்பள்ளி. வீரராகவா மேல்நிலைப்பள்ளி, உமாமகேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புரோவிடன்ஸ் மேல்நிலைப்பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, பகவான் ஸ்ரீசத்யசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விட்டல் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சாவித்திரி வித்யா லயா மெட்ரிக் பள்ளி, மார்னிங் ஸ்டார் மெட்ரிக் பள்ளி, இந்தியன் மெட்ரிக் பள்ளி, ராயல் மெட்ரிக் பள்ளி ஆகிய 52 கல்வி நிறுவனங்களுக்கு உரிய திட்ட அனுமதி பெற வலியுறுத்தி பல அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 
எனினும் எந்த ஒரு கல்வி நிறுவனமும் முறையாக அனுமதி கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை. எனவே இதை இறுதி வாய்ப் பாக எடுத்து கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் இத்துறையால் வரையறுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் முறையாக திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். 
தவறினால் அக்கல்வி நிறுவனங்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57ன்படி கடுமையான நடவடிக்கை எடுத்து வளாகத் தை பூட்டி சீல் வைக்கப்ப டும். இவ்வாறு கலெக்டரும், தஞ்சாவூர் உள்ளூர் திட்ட குழும தலைவருமான சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
dinakaran

Advertisement

Close