அதிரை ECR ரோட்டில் விபத்து! ஒருவர் படுகாயம்!

அதிரை ஈ.சி.ஆர் சாலை பிலால் நகரில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கு அருகே இன்று மாலை 4.30 மணியளவில் அதிரை நோக்கி ஒரு நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று குறிக்கிட்டது. இதனால் நிலைத்தடுமாறிய அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அதிரை ECRல் இது போன்ற விபத்துக்கள் வாடிக்கையாகிவிட்டன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close