எம்.சி.சி.யூ வார்டில் முதல்வர் ஜெயலலிதா????

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு கடந்த 9 தினங்களாக சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா சி.சி.யூ. வார்டில் (கிரிட்டிக்கல் கேர் யூனிட் ) இருந்து சிறப்புக் கவனிப்பு வழங்கப்படும் எம்.சி.சி.யூ. (மெடிக்கல் கிரிட்டிக்கல் கேர் யூனிட்) வார்டுக்கு மாற்றப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறல் உள்பட பல சிரமங்களுக்கு ஆளானார்.
அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை தொடர்ந்தனர். ஆனாலும் நுரையீரல் தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் லண்டனின் இருந்து வரவழைக்கப்பட்டார் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு. நேற்று மதியம் முதல்வருக்கு நடந்த நுரையீரல் தொடர்பான சிறப்பு சிகிச்சையை அடுத்து திட ஆகாராமோ, வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்வதிலோ சில நாட்களுக்கு சிரமம் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. நேற்று சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் சி.சி.யூ. வார்டில் (கிரிட்டிக்கல் கேர் யூனிட் ) இருந்து சிறப்புக் கவனிப்பு வழங்கப்படும் எம்.சி.சி.யூ. (மெடிக்கல் கிரிட்டிக்கல் கேர் யூனிட்) வார்டுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Close