கணவன்மார்கள் அவசியம் படிக்க வேண்டிய மிக முக்கியமான கட்டுரை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஒரு வெற்றிகரமான கணவர் மனைவியிடம் விவேகத்துடன் நடந்து கொள்வார் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும் மனைவியின் நேசத்துக்குரியவராகவும் திகழமுடியும் . 

இஸ்லாமின் நேரிய வழிகாட்டுதலின் காரணமாக மனைவியிடம் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்துகொள்வார்.

நற்குணங்களால் பின்னப்பட்டுள்ள இஸ்லாமிய வாழ்வியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார். மனைவியின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து, அவளது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறைவேற்றுவதில் தனது முழு ஆற்றலையையும் வெளிப்படுத்துவார். இதற்கிடையில் பெண் கோணலான எலும்பினால் படைக்கப்பட்டவள், அவளை முழுமையாக சீர்படுத்துவது அறவே சாத்தியமற்றது என்பதையும் மறந்துவிடமாட்டார்.

மனைவியிடம் விவேகத்துடன் நடந்துகொள்வார்.
உண்மை முஸ்லிம் , மனைவியிடம் அறிவுப்பூர்வமாகவும் கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவளது குடும்பத்தார் எவரையும் அவளுக்கு முன் தவறாகப் பேசக்கூடாது.

அவளது உறவினர்பற்றி அவளது இதயத்தைக் காயப்படுத்தும்படியான எந்த வார்த்தையையும் பேசிவிடக்கூடாது என்பதில் கணவன் கவனமாக இருக்கவேண்டும். அம்மனைவியும் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவருக்கு நோவினைத்தரும் இந்தக் காரியத்தையும் செய்துவிடாமல், அவரது குடும்பத்தாருக்கு எவ்வகையிலும் தீங்கிழைத்து விடாமல் நடந்துகொள்ள வேண்டும்.

கணவர் தன்னிடம் மனைவி வெளிப்படுத்திய ரகசியங்கள் எதையும் பகிரங்கப்படுத்தக் கூடாது. இதில் ஏற்படும் கவனக்குறைவும் அலட்சியமும் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சனைகளின் எரிமலையை வெடிக்கச்செய்து அவர்களிடையே நிலவும் அன்பொளியை அணைத்துவிடுகிறது .

புத்திசாலியான முஸ்லிம் இவ்வாறான சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். எல்லா நிலையிலும் இஸ்லாமின் தூய ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும்.

மனைவியின் குறைகளை சீராக்குவார்..
மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தனது மனைவியின் கல்வியறிவிலோ நடத்தையிலோ ஏதேனும் குறைகளைக் கண்டால் அவளிடம் அறிவார்ந்த முறையில் மென்மையாக நடந்து, அவளது குறைகளைக் கலந்து, அவளை செம்மைப்படுத்துவதில் ஆர்வம் கொள்ளவேண்டும்.

அவளை[ பண்படுத்தும் முயற்சியில் அவளிடம் ஆர்வக்குறைவோ வெறுப்போ வெளிப்பட்டால் அதை மென்மையாகவும் புத்திக் கூர்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.
எக்காரணத்தை முன்னிட்டும் பிறருக்கு மத்தில் அவளைக் கண்டிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்ணை கடுமையாகப் பாதிக்கும் விஷயம் என்னவெனில், அவளைத் தண்டிப்பதை பிறர் பார்ப்பதும், அவளைக் கண்டிப்பதை பிறர் கேட்பதும்தான். இறையச்சமுள்ள முஸ்லிம் பிற மனிதர்களைவிட உணர்வால் மிக நுட்பமானவர். அவ்வாறே மற்றவர்களின் உணர்வுகளையும் மிக அதிகமாக மதிப்பார்.

பெற்றோர், மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார்…
நற்பண்புள்ள முஸ்லிம் தனது பெற்றோர் மற்றும் மனைவியிடையே சமநிலைப் பேணுவதை நன்கறிவார் . இருவரில் எவருக்கும் அநீதி இழைத்துவிடாமல் , அவ்விருவருடனான உறவில் சமநிலை பேணி, பெற்றோருக்கு நோவினையளிக்காமலும், மனைவிக்கு அநீதியிழைத்து விடாமலும் விவேகத்துடன் நடந்து கொள்வார்.

பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து, உபகாரம் புரிந்து அவர்களது கடமையை நிறைவேற்றுவார். அவ்வாறே மனைவியின் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றுவார். பெற்றோருக்கு உபகாரம் செய்வதாலும் அவர்களைப் பேணுவதாலும் மனைவியை புறக்கணித்துவிடக்கூடாது. உண்மை முஸ்லிம் இறையச்சமுடையவராக இருப்பதால் இவ்வாறு சமநிலை மேற்கொள்வதில் அவருக்கு சிரமம் ஏதுமில்லை.

மேலும் அவர் இஸ்லாமின் மென்மையான நற்பண்புகளைக் கொண்டிருப்பார். அவரது மார்க்கம் பெற்றோர், மனைவியிடையே எவ்வாறு நீதமாக நடந்து, அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய சரியான அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்பதை அவருக்கு போதித்துள்ளது எனவே அதைப் பேணி நடப்பார்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்..

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author