எச்சரிக்கை! அடுத்த 5 நாட்கள் வங்கிகள் இயங்காது!

img_5683இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் முழு நேரம் விடுமுறை விடப்படும் திட்டம் சில மாதங்களுக்கு முன் அமலானது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 8-ஆம் தேதியானது அம்மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையாக உள்ளது.அதனைத் தொடர்ந்து மறுநாளான 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தேதியாகும்.இதனை தொடர்ந்து 10-ம் தேதி ஆயுத பூஜையும்,11-ம் தேதி விஜயதசமியும்,12-ம் தேதி மொகரம் பண்டிகையும் வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறைகளாகும்

எனவே அக்டோபர் மாதம் 8-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக அரசு வங்கிகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே அந்த நாட்களில் வங்கிகள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் பாதிப்படைவதோடு, ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Close