இஸ்லாமிய மாவீரர்களுக்கு எகிப்தில் மரண தண்டனை!

எகிப்தின் முன்னாள் அதிபரும் சகோதர இயக்கத்தின்தலைவர்களில்  ஒருவருமான முஹம்மது முர்சி, உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப்  பேரறிஞர் டாக்டர் யூசுபுல் கர்ளாவி உட்பட 105 பேருக்கு  எகிப்தின் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
தலைமை முப்தியின் (கிராண்ட் முப்தி) அனுமதிக்காக தீர்ப்பு அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமை முப்தி அனுமதி அளித்தால் அப்பீல் செய்யலாம்.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முர்சியை இராணுவம் சிறையில் அடைத்து ஆட்சியைப் பிடித்தது.
டாக்டர் யூசுபுல் கர்ளாவி கத்ரில் இருக்கிறார். கத்ர் நாடு அவருக்கு குடியுரிமை அளித்துள்ளது.  நீதிமன்றத்தில் அவர் இல்லாமலேயே,  அவரிடம் எந்த விசாரணையும் நடத்தாமலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் அடக்குமுறை இராணுவ அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடடினயாக முர்சியையும் டாக்டர் கர்ளாவியையும் மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் குரல் எழுப்ப வேண்டும்.
பெருகி வருகின்றன கொடூரங்கள்..!
-சிராஜுல்ஹஸன்

 Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close