சீனாவில் இரவு நேரங்களில் இணையதளம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை

சீனாவில் இரவு நேரங்களில் இணையதளம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சிறுவர்கள் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து அந்நாட்டு சைபர்ஸ்பேஸ் துறையினர் சிறுவர்கள் இரவு நேரங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட தடை விதித்துள்ளனர். சிறுவர்கள் இணையதளத்தில் அடிமையாவதை தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. 
சீனாவில் இணையதளம் பயன்படுத்துபவர்களில் 23% பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இளைஞர்கள் இணையத்துக்கு அடிமையாகி வருவது குறித்து சீன வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, சீனாவில் இணையத்துக்கு அடிமையானவர்களுக்கு என சீர்திருத்த மையங்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது என கூறியுள்ளார்.  
இந்த மையங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது சீன இளைஞர்களின் பேரழிவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். சீனாவில் இந்தத் தடைக்கு பலர் வரவேற்பு அளித்துள்ளனர். இணையதள விளையாட்டு நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Close