அதிரைக்கு வருமா அம்மா உணவகம்!

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் அம்மா உணவகம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் சாப்பாட்டுக்கே சம்பாதிப்பது எல்லாம் செலவழிந்து வந்த நிலையில் அன்மா உணவகம் காரணமாக காலை மாலை இரவு 3 வேலையும் சேர்த்தே வெறும் 20 ரூபாய்க்குள் செலவு அடங்கி விடுகின்றது. அந்த வகையில் குறைந்த ஊதியம் பெற்று குடும்பத்தை கடத்தும் பல சாமானியர்கள் இதனால் பயனடைகின்றனர்.

இந்த உணவகம் அதிரையை அடுத்துள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலும் சிறப்பாக இயங்கி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் வளர்ந்து வரும் நகரமாக அதிராம்பட்டினத்தில் உணவகம் துவங்கப்படவில்லை. அதிரை பேருந்து நிலையம் அல்லது சேர்மன் வாடி போன்ற மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இந்த உணவகத்தை துவங்கினால் கூலிதொழிலாளர்கள், நடுத்தர மக்கள் பலர் பயணடைவார்கள். இதனை ஏற்படுத்த அதிரை அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகரிடம் கோரிக்கை வைக்கலாம்.

Close