இலங்கையில் அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! (வீடியோ படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஷைகுல் பலாஹ் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி (பெரிய ஹஸர‌த்) அவர்களின் ஜனாஸா தொழுகை இன்று (13.10.2016) வியாழக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து சுமார் 4 மணிக்கு காத்தான்குடி-05, ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடாத்தபட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில்  இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது..

ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ரஹ்மானின் மறைவையொட்டி காத்தான்குடி பிரதேசத்தில் உணவுச்சாலைகள் (ஹோட்டல்கள்) மற்றும் பொதுச் சந்தை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

தற்போது அன்னாரின் ஜனாஸா பொது மக்கள் பார்வைக்காக காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாஸாவை பார்வையிட அதிகளவான உள்ளுர், வெளியூர் உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பெரும் திரளான பொது மக்கள் கலந்துகொண்டன்ற்.

இதனால் சன நெரிசலை குறைக்க ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி வீதி காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

img_6178 img_6179 img_6180 img_6181 img_6182 img_6183 img_6184 img_6185 img_6186

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author