பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின விழா!

Want create site? Find Free WordPress Themes and plugins.

manora-polytechnic-college-fi-630x330பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் உலக எழுத்தறிவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டது. அறிவியல் கண்காட்சி, வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 8, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இப்போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 110 மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு சில்க் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் முன்னிலை வகித்தார். இந்திய தொழில்நுட்ப கல்விக்கழக கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முத்துவேலு, கவிஞர் மறைமலையான், கல்லூரி இயக்குநர் அத்திமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் தொகுத்து வழங்கினார். முடிவில் இந்திய தொழில்நுட்ப கல்விக்கழக கல்லூரி துணை ஒருங்கிணைப்பாளர் ராஜன் நன்றி கூறினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author