அதிரை பிறை நேயர்களே! இனி நீங்களும் செய்தி பதியலாம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

viewers-postஅதிரை பிறை துவங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த காலங்களில் நமது தளம் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளின் மூலமாக வாசகரகள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. இந்த நிலையில் இது வரை எந்த தளங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டாத ஒரு வசதியை நமது அதிரை பிறை நாம் அறிமுகம் செய்துள்ளோம். அதாவது, இனி தங்களுக்கு கிடைத்த செய்திகளை, தங்கள் பகுதியில் உள்ள புகார்களை தாங்களே அதிரை பிறை இணையதளத்தில் நேரடியாக பதிவிடலாம்.

அதிரையர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காகவும், உங்கள் செய்திகளை உடனுக்குடன் வெளிபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரை பிறை தளத்தில் இந்த புதிய தொழில்நுட்ப மேம்பாட்டினை நாம் மேற்கொண்டுள்ளோம். அதிரை பிறையை கணினியில் பயண்படுத்துபவர்கள் மேலே மெனுவின் வலது புற ஓரத்தில் உள்ள உங்கள் செய்தி என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உள்ளவற்றை பூர்த்தி செய்து உங்கள் பதிவை வெளியிடலாம். அது போன்று ஸ்மார்ட் போன் பயணர்கள் தளத்தின் மேலே இடது புறத்தில் உள்ள மூன்று கோடுகளை அழுத்தினால் ஒரு மெனு திறக்கும். அதில் உங்கள் செய்தியினை கிளிக் செய்து பதிவிடலாம்.

இந்த புதிய தொழில்நுட்ப மேம்பாடு உங்கள் யாவரையும் கவரும் என நாங்கள் நம்புகிறோம்.222

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author