துபாய்க்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

கேரளாவிலிருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இன்று மாலை புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரெஸ் விமானம் நடுவழியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணத்தினால் மீண்டும் கேரளாவிற்கு திரும்பியது. இந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். அவர்களுடன் 6 விமானிகளும் இருந்தனர்.

விமான நிலையத்தில் இரவு 8.20 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் மற்றொரு விமானத்தில் துபாய்க்கு இன்றிரவு புறப்பட்டு செல்வார்கள் என விமான நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author