உத்தரவு கிடைத்தது! உண்ணாவிரதம் கலைந்தது! (படங்கள் இணைப்பு)

அதிரையில் அரசு மருத்துவமனையில் 24 மணி
நேர மருத்துவ வசதியை ஏற்படுத்தக்கோரி அதிரை
பொதுமக்கள் சார்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம்
பொதுமக்களால் பலவாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத
காரணத்தால் அதிரை மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஒன்றை வழங்கினர். அதில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையானால்
சாலை மறியல் நடத்தப்படும் என
எச்சரிக்கையும் விடப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால்
சாலை மறியல் செய்வதற்க்கு அறிவிப்புகள்
விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட பட்டுக்கோட்டை
கோட்டாட்சியர் அதிரை மக்களை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு
அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் அதிரை அரசு மருத்துவமனைக்கு விரைவில்
24 மணி நேர மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு இரவு
நேரத்தில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்
என உறுதியளித்தனர். இதனை
அடுத்து சமாதான பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்து பொதுமக்கள் அதிரை திரும்பினர். அதிரையின்
சில வெப்சைட்டுகளிலும் அதிரைக்கு
24 மணி நேர மருத்துவ சேவை கிடைத்தது” என்றெல்லாம் செய்திகள்
பதிந்தனர். இதை பார்த்த பொதுமக்களும் வெளிநாடு
வாழ் அதிரைகளும் ஆறுதல் அடைந்தனர்.

இருப்பினும் அவர்கள் உறுதியளித்தவாறு மருத்துவரை
நியமிக்காத காரணத்தால் பொதுமக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை அதிரை
அரசு மருத்துவமனையின் எதிரில்
துவங்கியுள்ளனர். காலை 9 மணியளவில் துவங்கிய இதில் பலர் கலந்துக்கொண்டனர்.

இதனை அடுத்து காலை 11:30 மணியளவில் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு
வந்த தாசில்தார் அவர்களும், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் மீனாட்சி அவர்களும்
இம்மாதம் 30ம் தேதிக்குள் மருத்துவர் நியமிக்கப்படுவார். இரவு நேரத்தில் பெண் மருத்துவர்
ஒருவரை நியமிக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து சுற்று உண்ணாவிரதத்தில்
ஈடுபட்ட அனைவரும் ஆறுதல் அடைந்தனர். இதனை அடுத்து அதிரை சேர்மன் அஸ்லம், சுற்றி இருந்த
கிராம தலைவர்கள், ஜமாத் தலைவர்கள் உண்ணாவிரத்தை கலைத்தனர்.

இது குறித்த வீடியோ விரைவில் இணைக்கப்படும்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close