அதிரையில் நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூலித்த SDPI யினர்! (படங்கள் இணைப்பு)

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் சனிக்கிழமை அன்று  7.8 ரிக்டர் அளவுகோளில் பதிவான மிகக்கோர நிலநடுக்கத்தில் சிக்கி 7,000 பேர்  பலியாகினர். பல்லாயிரக்கணக்காணோர் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் உலகெங்கிலும் உள்ள பல நாட்டு அரசுகளும், அந்தந்த நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் பல கோடிக் கணக்கில் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு SDPI கட்சியினர் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதிரையர்கள் பலரும் ஆர்வமுடன் நேபாள மக்களுக்காக பண உதவி செய்தனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close