அதிரை மக்களின் போராட்டத்தையடுத்து, 500 பேருக்கு 4000 வழங்க ஒப்புக்கொண்டது கனரா வங்கி!

அதிரை கனரா வங்கியில் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிரை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து வங்கி நிர்வாகம் சிலரை அழைத்து இன்று 300 நபர்களுக்கு மட்டும் 2000 ரூபாய்களை வழங்குவதாகவும், மற்றவர்கள் திங்கள் அன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியது. ஆனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்ததால், வங்கியின் இந்த முடிவையும் ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 500 பேருக்கு டோக்கன் வழங்கி, ஒவ்வொருவருக்கும், 4000 ரூபாய் வழங்க ஒப்புக்கொண்டது கனரா வங்கி15178152_1116899945053926_7573146982761525529_n 15181672_1116899901720597_927834821684857569_n img_7719 img_7721

Close