முத்துப்பேட்டை அருகே பா.ஜ.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே பா.ஜ.க பிரமுகர் வெங்கடேஷ் வெட்டி படுகொலை. நண்பர்கள் உட்பட 4-பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் வி.பி.எஸ். வெங்கடேஷ்(24). இவர் பா.ஜ.க கிளை தலைவர் மற்றும் உதைய பெட்ரோல் பங்க உரிமையாளர் சம்பவத்தன்று நேற்று இரவு 11:00 மணியளவில் பெட்ரோல் பங்கில் இருந்த இவரை முன்விரோதம் காரணமாக இவரின் நண்பர்கள் உட்பட 4 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 
இதை தொடர்ந்து அங்குள்ள போலிஸார் இச்சம்பவம் பற்றிய விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close