அதிரையில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஒருவர் படுகாயம்! (படங்கள் இணைப்பு)

அதிரை சேர்ந்தவர் பஷீர் அஹமது .ஆட்டோ ட்ரைவரான இவர் தன்னுடைய ஆட்டோவில் MSM நகரில் இருந்து ஈ.சி.ஆர் சாலையில் கடக்க முயன்றபோது  எதிர்பாராத விதமாக மல்லிப்பட்டினத்தில் இருந்து அதிரை பேருந்து நிலையம் நோக்கி வந்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதி விட்டு வேகமாக சென்று விட்டது.

  இதில் ஆட்டோ ஓட்டுனர் பஷீர் அவர்களின் கை, கால், இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் பஷீர் அவர்களை மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் கடந்து செல்லும் தனியார் பேருந்துகள் எந்த கவலையும் இன்றி அதிக வேகத்துடன் செல்வதால் ஈ.சி.ஆர் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

Close