Dr.Pirai – குடற்புண்

……குடற்புண்……

இந்நோயை பொதுவாக குடற்புண் என்று அழைப்பார்கள் ஆனாலும் இது குடலில் மட்டும் தோன்றுகிற நோயல்ல இரைப்பை மற்றும் ஜீரணப் பாதையிலும் தோன்றலாம் எனவே குடற்புண் என்று அழைப்பதை விட வயிற்றுப்புண் அல்சர் என்று அழைப்பதே பொருத்தமாக அமையும்.

உலகில் இந்த நோயில் பாதிக்கபடாத ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பான்மையினரை இந்நோய் பாதித்துள்ளதாக ஐக்கிய நாடுகளில் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இவ்வாறான அல்சர் நோய் தோன்றுவதற்கு உடலியல் ரீதியான காரணங்களை விட மனவியல் ரீதியான காரணங்களும் முக்கிய காரணமாகின்றது.
இன்றைய வாழ்க்கை முறை டென்ஷன் என்ற மன இறுக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. காலை எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளாக இருந்தலும் சரி.வேலைக்கு செல்லும் அப்பாவாக இருந்தாலும் சரி,வீட்டு வேலைகளை கவனிக்கும் அம்மாவாக இருந்தாலும் சரி, கூலி வேலை செய்பவர் முதல் பெரிய தொழில் அதிபர்வரை எவராக இருந்தாலும் இந்த அவசர கால உலகில் எதையுமே சரியாக செய்ய முடியாமல் ஒரு டென்ஷன் நிறைந்த மனதோடு இங்கும் அங்கும் அலைய வேன்டிய நிலை உள்ளது.
அவ்வாறு மிகவும் சிரம்மப்பட்டு கிளம்பிவிட்டலும்.

·         மனைவி உணவு செய்வதில் தாமதம்.
·        
பேருந்து குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை வந்தாலும் அடித்து
பிடித்து கொண்டு  ஏறவேண்டும்.
·        
அவ்வாறு கஷ்டப்பட்டு அலுவலகம் சென்றாலும் அங்கு மேலதிகாரிகள் தொல்லை.
·        
பள்ளி செல்லும் குழந்தைகளோ 10 நிமிடம் தாமதம் ஆனாலும்
அவர்களின் பதட்டம் சொல்லவே தேவையில்லை.
·        
வீட்டு வேளைகளையும் செய்து விட்டு வேலைக்கும் செல்லும் பெண்களின்
நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது
·        
இப்படி நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை எவ்வாறு நிம்மதியாக
நகர்த்த முடியும்.எனவே மனநிலை சார்ந்த பாதிப்புக ளால் தான் அல்சர் நோய் தற்காலத்தில்
ஏற்படுகின்றது.

Close