2017 ஆம் ஆண்டை முன்னிட்டு துபாயில் உணவு வங்கி முறையை அறிவித்த மன்னர்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

‘உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்” என்னும் இறைமறை வசனங்களை நினைவூட்டும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளில்
2017 ம் வருடம் முழுவதும் Year of Giving என்று பெயரிட்டு பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக யுஏஇ துணை அதிபர் மற்றும் துபாய் பிரதமரான ஷேக் முகமது பின் ராசித் அல் மக்தூம் தெரிவித்தார்.

முதல் கட்டமாக யுஏஇ உணவு வங்கியை இன்று துவங்கி வைத்து அரசின் இந்த நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால் நிர்வாகிகள் பெருமளவு பங்குபெற வேண்டுகோள் விடுத்தார்.
தங்களது தேவை போக மீதமாகும் உணவுகளை அரசு சார்பில் நியமிக்கப்படும் வாலண்டியர்கள் மூலம் சேகரித்து யூஏஇ க்கு உள்ளேயும், அண்டை பிரதேசங்களிலும் விநியோகம் செய்வதன் மூலம் நாட்டு மக்களிடம் தேவையுள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகரித்து உணவுப் பொருட்களை விரயம் செய்வது குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் ஷேக் முகமது ராசித் அல் மக்தூம.

நன்றி: Engr SULTAN

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author