தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது!

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கான கட்டணமும் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 350 ரூபாயில் இருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.வாகனங்களுக்குகான தகுதிச்சானற் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி 550 ரூபாயாக இருந்த வாகன தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் தற்போது 1,050 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தவணை கொள்முதல் ரத்து சான்றிதழுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய கட்டணம் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டர்களில் மாற்றப்படததால் அலுவலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author