அட்டகாசமான வசதிகளுடன் மீண்டும் வந்துவிட்டது நோக்கியா!

Want create site? Find Free WordPress Themes and plugins.
உலக தொழில்நுட்ப சந்கதையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எச்எம்டி குளோபல் நிறுவனம் தயாரித்து வெளியிடும் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6 என பெயரிடப்பட்டுள்ளது.
எச்எம்டி நிறுவனத்தின் இணையதளம் மூலம் எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 6, ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ்,  குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மூலம் இயங்குகிறது.
6000 சீரிஸ் அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
அதிக சத்தம் வழங்க ஏதுவாக டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் கொண்டுள்ள நோக்கியா 6 டூயல் ஆம்ப்ளிஃபையர் கொண்டுள்ளது. எதிர்பாராத விதமாக நோக்கியா 6 சீன சந்தையில் மட்டும் வெளியிடப்படுவதாகவும் இதன் விலை JD.com தளத்தில் CNY 1699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author