பொங்கலுக்கு கட்டாய விடுமுறை! தமிழகத்தின் கொந்தளிப்புக்கு பணிந்தது மத்திய அரசு

பொங்கல் விடுமுறையை விருப்பப் பட்டியலில் இருந்து கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்தியில் ஆளும் பாஜக அரசு பணிந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பொங்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், நேற்று மாலை மத்தியில் ஆளும் பாஜக அரசு பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் கிளம்பியது.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக முதல் அனைத்துக் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வகையில் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் செய்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன.

இதுதவிர, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இதுதொடர்பான கடிதத்தை இன்று காலை அனுப்பி இருந்தார்.

Close