SHARE

அதிரையில் இளைஞர்களால் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் இளம் இஸ்லாமியன் என்ற மார்க்க அறிவுப் போட்டி கடந்த 14-01-17 அன்று அதிரை ஏ.எல்.பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதில் முன்பதிவு செய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வினை எழுதினார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி இன்று 16-01-2017 (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் அதிரை செக்கடி குளம் அருகில் மிகச்சிறப்பான முறையில் நடத்தப்படவுள்லது. இதில் தமிழக அளவில் தலைசிறந்த உலமா பெருமக்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.