இந்த சிறுவனும் சமூகசேவகன் தான்!

நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவில் வாழும் 8 வயது சிறுவன் நிதி திரட்டினார்.
அவர் இதுவரை 26,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 லட்சம்) நிதி திரட்டியுள்ளார். அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நீவ் சராஃப்  (8). அவரது பெற்றோர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேபாளத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட நீவ் சராஃப், அவர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட முடிவு செய்தார்.
அதையடுத்து, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அமெரிக்க-நேபாள மருத்துவ அறக்கட்டளையை அணுகினார். 
அறக்கட்டளை மூலமாக வலைதளப் பக்கம் ஒன்றை உருவாக்கி, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்யுமாறு அவர் வலைதளத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதன்முலம், ரூ. 16 லட்சத்தை நீவ் சராஃப் குழுவினர் திரட்டினர். அதில், நீவ் சராஃப் தனது சொந்தச் சேமிப்பிலிருந்து அளித்த 384 டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25,000) அடங்கும். 

Advertisement

Close