அதிரையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற “இளம் இஸ்லாமியன்” போட்டிக்கான பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

அதிரையில் இளைஞர்களால் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் இளம் இஸ்லாமியன் என்ற மார்க்க அறிவுப் போட்டி கடந்த 14-01-17 அன்று அதிரை ஏ.எல்.பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதில் முன்பதிவு செய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வினை எழுதினார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று 16-01-2017 (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் அதிரை செக்கடி குளம் அருகில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. மௌலவி.ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மௌலானா அப்துல் ஹாதி ஆலிம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இதில் பிள்ளைகளுக்கு பொற்றோர் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து வந்தவாசி, உமர் மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா.V.K.M.ஹசன் பஷரி பாக்கவி அவர்களும், பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து மதுரை மஸ்ஜிதுன் நபவியின் தலைமை இமாம், பிரோஸ்கான் அல்-புகாரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதையடுத்து போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழுடன் கூடிய ஆறுதல் பரிசும், இரண்டு பிரிவுகளிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளம் இஸ்லாமியன் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான அதிரையர்கள் வருகை தந்தனர்.

வெற்றியாளர்களின் விபரம்:

பிரிவு 1

முதல் பரிசு: M.Y.அஹமது

இரண்டாம் பரிசு: S.அபூபக்கர்

மூன்றாம் பரிசு: சாதிக்

பிரிவு 2

முதல் பரிசு: M.S.சஹல்

இரண்டாம் பரிசு: ஜெ.அஹமது தஸ்லீம்

மூன்றாம் பரிசு: ஃபாரிஸ்

Close