அதிரை அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டா ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 250க்கு மேற்பட்டோரை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவித்து புதுவை மாநிலத்திலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 2 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், அதிரையை அடுத்துள்ள தம்பிக்கோட்டையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்து வருகின்றனர்.

படங்கள்: அபுல்ஹசன்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author