துபாயில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அதிரை உள்ளிட்ட தமிழக கிரிக்கெட் அணிகள் அறவழியில் போராட்டம் (படங்கள் இணைப்பு)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தம் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள், மெரினா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு துபாயில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் அதிரையை சேர்ந்த ABCC அணி வீரர்களும் ஆதரவு தெரிவித்து அமைதி வழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Close