அதிரையர்களே! உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள ஒரு அறிய வாய்ப்பு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் PETA அமைப்பு மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் கொடூர சூழ்ச்சிகளுக்கு எதிராகவும் இளைஞர்களின் மிகப்பெரும் போரட்டங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த போரட்டங்கள் ஏன் நடைபெருகின்றது? அதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகான பின்வரும் சில புத்தகங்களை நீங்கள் படிக்கலாம்:

1)பால் அரசியல்
2)சுற்றுச்சூழலும் நட்பும்
3)உயிரைக்குடிக்கும் புட்டி நீர்
4)புவிவெப்பமடைதலும் கால நிலைப்பிறழ்வும்
5)மாபெரும் விதைக்கொள்ளை
6)மருத்துவ அரசியல்
7)கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர்
8)விவசாய நெருக்கடியும் பேரழிவு திட்டங்களும்
9)கார்பொரேட் என் ஜி ஓக்களும் புலிகள் காப்பகங்களும்
10)ஆயுத வியாபாரத்தில் அரசியல்

இதுபோல் இன்னும் பல தலைப்புகளில் புத்தகங்களை வாங்கி படிக்க நீங்கள் அதிரை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மானுட நல மையத்தின் HWC நூலகத்தை நாடலாம்.

இதில் பொது அறிவை மேம்படுத்தும் பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.

எனவே அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அண்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: புத்தகம் தேவைப்படுவோர் நமது நூலக பொருப்பாளரிடம் அனுமதி பெற்று மூன்று நாட்களுக்குள் திருப்பித்தரும் உத்திரவாதத்துடன் புத்தகத்தை எடுத்துச்செல்லலாம்.

நூலக அலுவல் நேரம்: காலை 10 மணி முதல் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, வெள்ளி விடுமுறை

இப்படிக்கு

மானுட நல மையம் (HWC)
1-B அல் அமீன் பள்ளி வளாகம்,
பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு,
அதிராம்பட்டினம் -614701
போன் : 9629229919

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author