பட்டுக்கோட்டை அருகே நடந்த விபத்தில் அதிரை பெண்களுக்கு காயம்!

அதிரையை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆட்டோவில் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். 

முதல்சேரி பஸ்நிறுத்தம் அருகே ஆட்டோ சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அந்த இரண்டு பெண்களும் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

இதுகுறித்து அந்த பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

-dailythandhi

Close