அதிரையில் 2 ரயில்கள் எதிரெதிரே செல்லும் வகையில் ரயில்வே பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

பட்டுக்கோட்டை – திருவாரூர் இடையே 74 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதில், அதிராம்பட்டினம், திருநெல்லிக்காவல், மாங்குடி, மாவூர், அம்மனூர், ஆலத்தம்பாடி ஆகிய ஊர்களில் ரயில் நிலையக் கட்டடங்கள், நடை மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க ரூ. 17.26 கோடி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டையில் ரயில் நிலையக் கட்டடம், நடைமேடை, நடை மேம்பாலங்கள், பிளாட்பாரத்திற்கான மேற்கூரை ஆகியவற்றை அமைக்க ரூ.19.23 கோடி என மொத்தம் ரூ.36.49 கோடி ஒதுக்கப்பட்டு, 10 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கடற்கரைச் சாலையருகே ரயில்வே பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ரெடிமிக்ஸ் இயந்திரத்தின் மூலம் தயாராகும் காங்கீரிட் கலவை பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 2 ரயில்கள் எதிரெதிரே கடந்து செல்லும் வகையில் 35 மீட்டர் அகலம், 15 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டப்படுகிறது.


வரும் மார்ச் இறுதிக்குள் பாலப் பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றின் குறுக்கே ரயில் பாலம் அமைக்கும் பணியும் விரைவாக நடந்து வருகிறது.

Close