மெரினா புரட்சியில் உஸாமா பின்லேடன் படத்துடன் வந்தது யார்? வெடிக்கும் சர்ச்சை!

மெரினா புரட்சியில் உஸாமா பின்லேடன் படத்துடன் வலம் வந்தது யார் என்பதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.மெரினா புரட்சியின் போது காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை பேசினார்கள்; பின்லேடன் படத்துடன் வலம் வந்தனர்; ஆகையால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நேரிட்டது என சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களையும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். தற்போது பின்லேடன் படத்துடன் வந்தது யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிற தகவல் படுவேகமாக வைரலாக பரவி வருகிறது.

அதில் சர்ச்சைக்குரிய வண்டி எண்: TN05 BC 3957; இந்த எண்ணின் உரிமையாளர் யார் என்பது குறித்து அறிய அரசின் VAHAN TN05BC3957 என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாமும் அந்த படத்தில் உள்ள வண்டி எண்ணின் உரிமையாளரை அறிய வண்டி எண்: TN05 BC 3957 குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். நமக்கு கிடைத்த பதில் இதுதான்:

-oneindiatamil

Close