அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் எரிக்கப்பட்ட மசூதிக்கு ₹5.25 கோடி நிதி வசூல்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

டிரம்ப் பதவி ஏற்றபின் ஒட்டு மொத்த அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி உள்ளது போன்ற செய்திகள் நியூஸ் மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் ஓங்கி ஒலிக்கிறது.

அந்த கூற்றுக்கு வலு சேர்த்தார்ப்போல் அமைந்தது விக்டோரியா, டெக்ஸாஸில் விசமிகளால் தீ வைக்கப்பட்ட அழகிய பள்ளி வாசல்.
இப்போது நிலை என்ன.. உண்மையிலேயே அமெரிக்கர்கள் அனைவருமா வெறுப்பை வளர்க்கிறார்கள். இல்லவே இல்லை.

இந்த மஸ்ஜித் எரிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் பல இடங்களிலும் இருந்து மஸ்ஜிதை பார்வையிட வந்து குவிந்த அமெரிக்கர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

வந்த ஒவ்வொருவரும் என்னால் இந்த பள்ளிக்கு என்ன செய்ய முடியும் என்ற கேள்வியோடே வந்தனர். நான் கட்டுமான சாதனங்கள் தருகிறேன், என்னால் பிளம்பிங் செய்து தர முடியும், நானே கட்டி தருகிறேன் என சொன்ன பணமும் மனமும் கொண்டோரும் அதில் அடக்கம்.
இந்த பள்ளி மீண்டும் கட்டி எழுப்ப பட வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றவர்கள் இஸ்லாமியர்களை விட அமெரிக்கர்களே.

அவர்களின் வேண்டு கோள் ஏற்கப்பட்டு கோபண்ட்மீ எனும் க்ளவுட் பண்ட் மூலம் பணம் திரட்ட முடிவு செய்து கட்டுமானத்திற்கு தேவையான பணம் US $850,000 (கிட்டத்தட்ட இலங்கை மதிப்பு சுமார் 15 கோடிகள்) என நிர்னயிக்கப்பட்டு, குறைந்தபட்சம் $10, அதிகபட்சமாக $100ம் தரலாம் என முகனூல் வழியாக அறிவிக்கப்பட்ட து.
இது அறிவிக்கப்பட்ட 24மணிக்கூரில் இது மிக பெரிய வைரலாகி 75000 சேர்களை கடந்து, தேவையான $850,000ல் 780,000 டாலர்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இது கிட்டத்தட்ட 17000 பேர்களின் பங்களிப்பு. ஒரு கட்டத்தில் கோபண்டின் சர்வர் கிராஸ் ஆகும் நிலைமை கூட உருவாகியது. கோ பண்டின் வரலாற்றில் இத்தனை பெரிய தொகை அறிவிக்கப்பட்ட 24 மணிக்கூரில் (கிட்டத்தட்ட 90சதமானம் பண்ட்) இதுவரை திரட்டப்பட்ட தில்லை. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காசோலைகள் அனுப்பி உள்ளதாகவும் தகவல் தந்துள்ளனர்.

இது எப்படி சாத்தியமாய்ற்று. பணம் தந்தவர்கள் அனைவரும் அப்துலும், ஆசிபும், இஸ்மாயிலுமா என்றால் இல்லை… இதை வைரலாக்கியது இஸ்லாமியர்களா.. என்றால் இல்லை.

இதனை சாத்தியமாக்கி காட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்க ரோபர்ட்டும், மேத்யூவும், ஜேசனும் தான். இவர்களால் நிரம்பியதுதான் அமெரிக்கா.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author