அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் லண்டன் கிளை நடத்தும் விருது வழங்கும் விழா!

ஷம்சுல்சங்கம்- அதிராம்பட்டினம்
              லண்டன் கிளை 
   அன்புடையிர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வரும் 16.05.2015 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் லண்டன் கிளையின் சார்பாக நம் அதிராம்பட்டினம் நகருக்குள் அமைந்துள்ள மேல் நிலைப்பள்ளிகளுக்குள் முதல்மூன்று இடங்களைப் பெற்று அரசுத்தேர்வில் வெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசளித்துப் பாராட்டி அவர்களை மேல்நிலைப் பட்டப்படிப்புகளுக்கு ஆர்வம் பெறச் செய்வதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அத்துடன் நமதூரில் ஊடகச் சேவைபுரிந்து வரும் ஊடகத்துறை நண்பர்களுக்குப் பாராட்டும், நமதூரின் மத்ரஸாக்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஊரின் கண்ணியமிக்க பெரியோர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிகள் ஆண்களுக்கு செக்கடிப்பள்ளி வளாகத்திலும் பெண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தாங்கள் அனைவரும் தவறாது இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
                           இப்படிக்கு 
              ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
                     லண்டன் கிளை

Advertisement

Close