சவுதியில் இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும்!

சவுதியில் இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும் என்றும் கடந்த‌ 16 மாதங்களில் 5 லட்சம் இந்தியர் களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் வீட்டு வேலைகள் செய்வதற்காக இந்தியாவில் இருக்கும் மனிதவளத்தைப் பயன்படுத்திக் கொள்ள கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன் மூலம் கடந்த 16 மாதங்களில் 5 லட்சம் இந்தியர்களுக்கு சவுதியில் வேலை கிடைத்திருக்கிறது.
இதன் மூலம் அங்கு வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் தற்போது அதிகளவு வெளி நாட்டினராக இந்தியர்கள்தான் இருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. எனினும், அந்த ஒப்பந்தம் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதை மட்டுமே பேசுகிறது. குறைந்தபட்ச ஊதியம் குறித்து அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் இருந்து சவூதிக்கு வேலைக்கு அமர்த்த ஒரு பணியாளருக்கு 18 ஆயிரம் முதல் 21 ஆயிரம் சவுதி ரியால்கள் (சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை) செலவாகிறது. தவிர ஒருவரை பணிக்கு அமர்த்தும் நடைமுறைகள் முடிவதற்கு 5 முதல் 8 மாதங்கள் வரை ஆகின்றன.

Advertisement

Close