ஜெயலலிதா விடுதலையை முன்னிட்டு அதிரை அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

 நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு காலை 11 மணிக்கு வெளியானது. 

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். 

இதன் காரணமாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் விடுதலையை முன்னிட்டு  அதிரை அதிமுக நகர செயலாளர் திரு. பிச்சை தலைமையில், மாவட்ட  அதிமுக சிறுபான்மையினர் செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலையில் அதிமுக  தொண்டர்கள் இன்று காலை 11:00 மணியளவில்  அதிரை பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.

Advertisement

Close