TNCA கிரிக்கெட் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறியது அதிரை AFCC!

அஸ்ஸலாமு அலைக்கும்.. 
தஞ்சையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட போட்டியில் நமது AFCC அணி கடந்த 5 மாதங்களாக விளையாடி வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று கால் இறுதிப் போட்டியாக AFCC அணியும் தஞ்சை KMCC அணியும் விளையாடின. 30 ஓவர் கொண்ட போட்டியில் டாஸ் வென்ற AFCC அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 26வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  130 ரன்கள் மட்டுமே எடுத்தது.. 

அடுத்துக் களமிறங்கிய KMCC தஞ்சை அணி ஆட்டத்தொடக்கதில் 3 விக்கெட்களை இழந்து சற்று நிதானமாக ஆடிவந்தது.. இருப்பினும் AFCC அணி வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல்  27வது ஓவரில் 129 ரன்கள் பெற்று தனது அனைத்து விக்கெட்களையும் இழந்த்து… 

இதன் மூலம் AFCCஅணி 1 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.. அல்ஹம்துலில்லாஹ்

Advertisement

Close