ரியாத்தில் 105 பேர் இஸ்லாத்தை தழுவினர்!

சவுதியின் தலைநகர் ரியாத்தில் ஒரே இரவில் 105 பேர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே திட்ட பணிகளில் பிரேசில் நாட்டவர்கள் உட்பட பல நாட்டை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். மெட்ரோ திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் மூலம் செய்யப்பட்ட இஸ்லாம் பற்றிய அறிமுகம், அவர்களை உடனே கவர்ந்து இழுத்தது.
இதன் பலனாக 105 பிறமத மத சகோதரர்கள் ஒரே நேரத்தில் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்.
சத்தியத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த சகோதரர்கள் மீது இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக.

Advertisement

Close