திருச்சி விமான நிலையத்தில் அதிரையை சேர்ந்த நபர் கைது..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

திருச்சி- சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் வழியாக திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் திருச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகள், இணை கமிஷனர் சிவகுமார் தலைமையில் திருச்சி வந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். தங்கம் பறிமுதல் விமான நிலைய வெளி வளாகத்துக்குள் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அதிராம்பட்டினம் மற்றும் நாகூரை சேர்ந்த 2 நகை வியாபாரிகள், கடத்தி வரப்படும் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்க காத்திருந்ததும் தெரிய வந்தது. இவர்கள் வைத்திருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா விமானங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் பல்வேறு பயணிகளிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நன்றி-தினகரன்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author