உள்ளூர்

அதிரையிலிருந்து நெடுவாசல் போராட்டத்துக்கு புறப்பட்டு சென்ற மமக கட்சியினர் (வீடியோ, படங்கள்)


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, வாணக்கன் காடு, கருக்காகுறிச்சி பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குருடாயில் மற்றும் எரிவாயு கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ம் தேதி அனுமதி அளித்தது.

விவசாயத்துக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்துக்கு தடை விதிக்கவும், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யவும் கோரி கடந்த 16-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போராட்டக் குழுவையும் அமைத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் போல, நெடுவாசல் போராட்டத்திலும் இளை ஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். உள்ளூர் மக்களுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங் களிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அதிரை தமுமுக மமகவினர் நெடுவாசலுக்கு புறப்பட்டு சென்றனர்.

Show More

Related Articles

Close