அதிரை பைத்துல்மாலில் தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை பைத்துல்மாலின் அலுவலக மாடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய ஆறு மாத தையற் பயிற்சி வகுப்புகள் மார்ச் 2016 முதல் ஆகஸ்ட் 2016 வரை நடைபெற்றது அதில் 47 பெண்கள் சேர்ந்து, பயின்று, தேர்ச்சி பெற்று சான்றுகள் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் 31 பெண்கள் பயின்று வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் வகுப்புகள் நிறைவடைந்த நிலையில் அதற்கான சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (03-03-2017 வெள்ளிக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதலில் ஹாஜி.H.முகமது இபுராஹிம், ஹாஜி.S.K.M.ஹாஜா முகைதீன், ஹாஜி.பேரா.அப்துல் காதர் ஆகியோர் தையற் பயிற்சியின் அவசியத்தையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்கி தெளிவாகவும், சுருக்கமாகவும், உரையாற்றினார்கள்.

இறுதியாக தேர்ச்சி பெற்ற 31 பெண்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.

குறிப்பு: மார்ச் 2017 முதல் ஆகஸ்ட் 2017 வரை நடைபெற உள்ள தையற் பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது பயிற்சி பெற விரும்பும் பெண்கள் அதிரை பைத்துல்மாலினை அணுகவும்.

தொடர்புக்கு: 043730241690–
அதிரை பைத்துல்மால்

No.23/1,நடுத்தெரு
அதிராம்பட்டினம் – 614 701
தஞ்சை மாவட்டம்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author