பதிவுகள்

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.

மினிமம் பேலன்ஸ் ரூ.5000 :

பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

குறைந்தால் அபராதம் :

இந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதுன் அடிப்படையில் வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில் ஏடிஎம்.,களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Close