வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி

தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76 என நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆக அதிகரித்துள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76ஆக உயர்ந்துள்ளது. இவ்விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ62.63 ஆகவும் அதிகரித்துள்ளது.

Close