100 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிவாசல் சொத்தை அபகரிக்கும் மெட்ராஸ் சில்க்ஸ்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

திருவள்ளூர் ‘அஹ்மத் ஷா படேமகான்’ பள்ளிவாசலுக்கு சொந்தமான தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் இருக்கும், திருவள்ளூர் டவுன் பெரும்பாக்கம் சர்வே எண் 229/3-ல் அமையப்பெற்ற. ₹ 100 கோடி மதிப்புடைய 2.44 ஏக்கர் நிலம், 3 மாதங்களுக்கு முன்பு ‘சென்னை சில்க்ஸ்’ நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது. கடந்த 17/11/16 அன்று நடந்த இந்த மோசடி பத்திரப்பதிவு (Document No: 11378/2016… Tiruvallur SRO) குறித்து, கடந்த 06/12/2016 அன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு புகார் அளித்ததன் பயனாக ‘RDO’ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

RDO விசாரனைக்கு உத்தரவிடப்பட்டு 3 மாதங்களாகியும் அதன் விவரம் எதுவும் நமக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், காலியாக இருக்கும் மேற்படி நிலத்தில், ₹500 கோடி செலவில் 11 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட DTCP, CMDA போன்ற அங்கீகாரம் பெற முயற்சிப்பதாக தகவல் வருகிறது. அத்துடன் அல்லாமல், மேற்படி வக்ப் நிலத்தில் கட்டுமாணப் பணிகளும் தொடர்ந்து நடந்தே வருகிறது.

அதுகுறித்து உடனுக்குடன், நாம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்துவந்தாலும் வேலைகள் நின்றபாடில்லை. தமிழ்நாடு வக்ப் வாரியமும், தன் பங்குக்கு சில சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிக மிக சிறுபான்மையினராக திருவள்ளூரில் வாழும் முஸ்லிம்களால், இவ்வளவு பெரும் பண பலத்துக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது. மீறி செயல்பட்டால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைதான் உள்ளது. அல்லாஹ் கொடுத்த உயிர், அவன் அளித்த வாழ்வு என அனைத்தையும் தியாகம் செய்ய தயார் என்ற நிலையில் தான் இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு

J.ஜாகிர் ஹுசைன்
தலைவர்,
அஹ்மத்ஷா படேமகான் பள்ளிவாசல், திருவள்ளூர்.

9380945727 & 9444781644

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author