அதிரை APL சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது SVG தஞ்சை அணி

அதிரை
ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய APL 20-20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 11 நாட்களாக
சிறப்பாக நடந்து வந்தது. இதில் தமிழக அளவிலான தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின.

தொடரின்
இறுதிப் போட்டியான இன்று, நேற்றைய தினம் அதிரை WCC அணியை வீழ்த்திய SVG தஞ்சை அணியும்
அருண் நெட்ஸ் தஞ்சை அணியை அறையிருதியில் வீழ்த்திய RVMCC தஞ்சாவூர் அணியும் மோதின.
இதில்
சிறப்பாக விளையாடிய SVG தஞ்சை அணி இறுதி போட்டியில் RVMCC தஞ்சாவூர் அணியை வீழ்த்தி
APL சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய
SVG தஞ்சை அணி வீரர் வினோத் அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில்
அதிக ரன்களை குவித்த SVG தஞ்சை அணி வீரர் ராஜ்குமார் அவர்களுக்கு APL தொடர் நாயகன்
விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வெற்றியாளர்கள்
விபரம்:
01ம் இடம்: SVG தஞ்சை அணி
02ம் இடம்: RVMCC தஞ்சாவூர் அணி
03ம் மற்றும் 04ம்  இடம்: அதிரை WCC மற்றும் அருண்
நெட்ஸ் தஞ்சை
தொடர்
நாயகன்: SVG தஞ்சை அணி வீரர் ராஜ்குமார்


Close